சிரிப்பு வருது

சிரிப்போம் சிரிப்போம்… சிரித்து கொண்டே இருப்போம்….

Category Archives: தமிழ் ஜோக்ஸ்

ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!

*******************************************************************************************

ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”
”அடடா, கெட்ட செய்தி என்ன?”
”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.”
”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?”
”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

*******************************************************************************************

ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”
வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”
அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”
வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”!!!

மனைவி அடிச்சுத் தீர்த்துடறா…!

ஓர் அரிசிக் கடையில் இருவர் பேசியது;

அரிசி கிலோ எவ்வளவு?
பதினைஞ்சு ரூபாய்!
கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க . இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?

 

சலூனில் இருவர் பேசியது;

மதுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
எனக்கு முதல் சமாசாரம் மட்டும்தான்டா தெரியும்… ரெண்டாவதா சொன்னியே அதப்பத்தி தெரியாதுடா ……
மது குடிச்சா நாம ஆடுவோம் . விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க …..

 

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!
ஏன் அப்படி சொல்றே?
மயிலுக்கு தமிழ் தெரியாதே!

 

என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு…
அட… நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

 

உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக…

 

எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு…
எங்க தலைவரு ‘சிக்கனோட’ பயன்படுத்துவாரு.

 

எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா….

 

உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது ‘ஈஸி’ சேராச்சே!

 

கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி
நீ பரவாயில்லே… என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா…!

 

 

அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்

மனைவி : “உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும்
கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

ஒரு கணவனும் மனைவியும் வெளியே சென்று வீடு திரும்பினர்.
அப்போதுதான் அவர்களிடம் கதவை
திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர்.
” அண்ணலும் ‘நோ கீ’னார்… அவளும் ‘நோ கீ’னார்”

ம்னைவி : “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?”
கணவன் : “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-“உன்னோட இந்த காமெடிதான்”

மனைவி:- “ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று
ஒரு பகுதி கூட கிடையாதா?”
கணவன் :-“ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு

ஒரு பகுதி இருக்கே!”

என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர்,
குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக் காரருக்கு உடம்பு சரியில்லன்னு
சொல்ல வந்தேன்.

மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற…
வாஷிங் மெஷின் எங்க?
கீதா:- அது ஆபீஸ் போயி்ருக்குடி

கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்

மனைவி:- உண்மையை சொல்லுங்க நேத்து ராத்திரி கனவுல யார் வந்தா….?
கணவன்;- நீதான் வந்த..
மனைவி;- பொய் சொல்லாதிங்க நீங்க தூக்கத்தில நல்லா பேசிகிட்டு இருந்த்தீங்களே

மனைவி:- இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
கணவன்;- எப்படி சொல்றே?
மனைவி:-எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்……..

மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
கணவன் : ரொமப தேங்ஸ்.
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன்.
பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.

கணவன் : கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு
நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ,
இப்பல்லாம் உனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.
மனைவி : நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச் சிட்டீங்களே.

கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

ஹலோ! PEPSI உமாவா??????

தமிழ் ஜோக்ஸ் பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்………!
ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை….
மற்றவன்: ஏன்?
ஒருவன்: எல்லா சர்தாரும், “Enter ur PIN”ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க.
ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க………
உமா: சாரிங்க…நான் இப்பொ சென்னைல இருக்கேன்.
வாத்தியார்: ஒரு “COMPOUND sentence” சொல்லுடா!
பையன்: “STICK NO BILLS”
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ……… ????
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்…….
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா… வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க…

 

ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி

 

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”       – நியாயமான ஒரு கேள்வி

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு
, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.


வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.

இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.”


அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.
இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி
, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க “
Client”னு சொல்லுவோம்.

சரி”

இந்த மாதிரி
Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants. …”.

இவங்க போய்
Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்
?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா
?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்
, “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.
அப்பா : இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?

“MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

அப்பா :
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?”

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.


அப்பா :
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம்
, 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்

அப்பா : “500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?”

இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும்.
50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த
50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும்
50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு “ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

அப்புறம்?”அப்பா ஆர்வமானார்.

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே “இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்”னு சொல்லுவோம்.

அப்பா :
“CR-னா?”

“Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்”னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

அப்பா : இதுக்கு அவன் ஒத்துபானா?”

ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு
, பாதி வெட்டிட்டு வர முடியுமா?”

அப்பா :
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும்
, ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”
அப்பா :
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.”

அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது.”

அப்பா : அப்போ இவருக்கு என்னதான் வேலை?” –

அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை.”

பாவம்பா”

ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.”


அப்பா :
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”

ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை

எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.”


அப்பா :
நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!”

இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.”

அப்பா :
இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?”

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க… டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு” சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.”

அப்பா :
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?”

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி.”
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை

செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”

அப்பா: கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?”

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.”

அப்பா :
எப்படி?”

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.” இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு
, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்”.

அப்பா :
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?”

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.”

அப்புறம்?”

ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.”

அப்புறம்?”

அவனே பயந்து போய்,
எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு”
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.”


இதுக்கு பேரு “
Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது
, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு” இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.


அப்பா
: எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா.”

தொரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது……

நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வளவு  முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்கள்!!
1) “Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave.”

இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு!

2) “as I want to shave my son’s head , please leave me for two days..”

பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்!

3) “as I am marrying my daughter , please grant a week’s leave..”

மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு!

4) “Since I’ve to go to the cremation ground at 10 o-clock and I may not return , please grant me half day casual leave”

மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு!

5) “I am suffering from fever , please declare one-day holiday.”

இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்!

6) “As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today”

இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு!

7) “As my headache is paining , please grant me leave for the day.”

தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்!

8) “My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”.

அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்!

இப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்

1) “I am enclosed herewith…”

அவரயே சேர்த்து அனுப்பறாராம்!

2) “Dear Sir: with reference to the above , please refer to my below…”

மேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு!

3) “I am well here and hope you are also in the same well.”

இவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு!

4) “This has reference to your advertisement calling for a ‘ Typist and an Accountant – Male or Female’… As I am both(!! )for the past several years and I can handle both with good experience , I am applying for the post.
கடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு!

 

source:  http://mohanacharal.blogspot.com/2009/10/blog-post_24.html

நவீன திருக்குறள்…

நவீன திருக்குறள்…

அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் எழுதிப் பழகு.

ஆட்டலில் நல்லாட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
ஓட்டலில் ஆட்டப் படும்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க Employment Office முன்.

இன்பத்துள் இன்பம் சொறியின்பம் அவ்வின்பம்
சொரிந்தபின் துன்பம் தரும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல எரியாத
Municipality விளக்கே விளக்கு.

கற்ககசடற கற்கண்டு குமுதம் கற்றபின்
விற்க பாதி விலைக்கு …

போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தக.

– சிசு…

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

குறிப்பு : இது கற்பனையே! உண்மை அல்ல.

சுட்ட இடம்: http://www.tamilthottam.in/t3322-topic

புதிய ‘மா’த்திச்சூடி…

புதிய ‘மா’த்திச்சூடி…

அறஞ் செய இரும்பு
ஆறுவது காபி
இயல்வது பெட்டிங்
ஈவது லஞ்சம்
உதவுவது கடத்தல்
ஊதுவது சிகரெட்
எப்படியும் பணம் சேர்
ஏமாற்றிப் பிழை
ஐஸ் வைக்கக் கற்றுக்கொள்
ஒருவனை (ளை) மட்டும் நேசி
ஓசியில் வாழப் படி.
ஒள… (தெரியலீங்க)

 

எழுதியவர் :Surez Kumar (surezkum…@gmail.com)

திருமணத்திற்கு முன்…… திருமணத்திற்கு பின்…….

திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசிஇனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீநான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்

அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?

அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….

அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

அவன் : ம்ம்ம்வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : என்னம்மா இதுநான் அந்தமாதிரி ஆள் இல்லை….!

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : ம்ம்ம்.

அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்