சிரிப்பு வருது

சிரிப்போம் சிரிப்போம்… சிரித்து கொண்டே இருப்போம்….

Category Archives: தமிழ் ஜோக்ஸ்

அந்த ராஸ்கல் மறுபடியும் போன் பண்ணினான் டாக்டர்

வாணி: உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா .. .. கேரட் அல்வா-னு அடிக்கடி சொல்லிட்டு வர்றியே ஏன் ?
ராணி: கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே

இதோ பாரும்மா கனமான பொருளை எல்லாம் உன்னைத் தூக்கக்கூடாதுன்னு நான் சொன்னது வாஸ்தவம்தான், அதுக்காக, பாத்ரூம்ல வழுக்கி விழுந்த உன் மாமியாரைத் தூக்காம இருந்தது கொஞ்சம் கூட நியாயமில்லை.

 

என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.
அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க

 

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க.
ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

 

வீட்டுக்காரம்மா: நம்ம வீட்டு ஐயா எனக்குத் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டார்டீ.
வேலைக்காரி: அப்ப என்னை சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போனதைக் கூட சொல்லிட்டாங்களா .. .. ?

 

இன்னிக்கு அவருக்கு ஓசிப் பத்திரிகை கிடைக்கலையா ?
ஏன் ?
பத்திரிகை தர்மமே இல்லாமப் போச்சுன்னு புலம்பிக்கிட்டுப் போறாரே.. .

 

இன்றைய மெகா ஜோக்:
இரண்டு காதுகளும் தீய்ந்துபோன நிலையில் முக்கல் முனகலோடு டாக்டரிடம் ஒடிவந்தான் ஒருவன்.
“எப்படிப்பா இப்படி ஆச்சு ?” என்று வியப்போடு கேட்டார் டாக்டர்.
நான் சட்டையை அயர்ன் பண்ணிட்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து டெலிபோன் மணி அடிச்சது.
போன் ரிஸீவரை எடுத்துக் காதுல வைக்கறதக்குப் பதிலா அயர்ன் பாக்ஸை
வெச்சுட்டேன். காது தீய்ஞ்சுபோயிட்டுது * என்றான் அவன்.
“சரி .. .. இன்னொரு காதும் எப்படித் தீய்ஞ்சது .. ?”
“அந்த ராஸ்கல் மறுபடியும் போன் பண்ணினான் டாக்டர்”

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா…??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.

ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது

வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.

சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க,

திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.

சரியா சோறே போடறதில்லை,

இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.

அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,

குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,

சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.

சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி

ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.

கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டாஇப்படித்தான்.

—————————————————————————————————

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்…

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,

கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்

என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு

வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.

அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்.

நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.

கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட

இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.

நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.

நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து

அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு…

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

அலுவலகத்தில் உறங்குவது எப்படி?

This slideshow requires JavaScript.

சொர்க்கத்தில் இமெயில் வசதி

ஒரு சிட்டில பெரிய பிஸ்னஸ் பண்ணற ஒருத்தர் இருந்தாராம்.அவர் தன்னோட  பிஸ்னஸ் விசயமா வெளியூர்  போய் ஹேட்டல்ல தங்கி இருந்தாராம்.அவர் இரண்டு நாளா ஆத்துகாரியோட பேசவே டைம் கிடைக்கல.அதனாலேஅவர் போன்ல தான் பேச முடியல  ஒரு இமெயில் பண்ணலாம் அப்டின்னு  லேப்டாப்  ஆன் பண்ணி மெயில் பண்ண ரெடி ஆகிட்டாரு.அவரோட  போதாத காலமோ என்னவோ ! மனைவியோட மெயில் அட்ரஸ்க்கு பதிலா வேற ஒருத்தர்ட மெயில் அட்ரஸ்ஸ டைப் பண்ணி மெயிலையும் அனுப்பிட்டாரு.

காட்சி – 2
எங்கையோ ஒரு இடத்தில ஓர் விதவை பெண் தன்னோட  கணவன் மரண இறுதி சடங்க முடிச்சுடு வீடு வந்து யாராவது இரங்கல் செய்தி அனுப்பி இருக்கங்கலா  என்று பார்ப்பதுக்கு தன்னோட  இமெயிலை செக் பண்ண தொடங்கினாள்.

சில மெயில்களை வாசித்து விட்டு அடுத்த மெயிலுக்கு சென்றாள்.மெயிலை வாசித்தது மட்டுமே அவள் தலைசுற்றி கீழ விழுந்துட்டாள்.அவள் வாசித்தது நம்ம பிஸ்னஸ் மேன் அனுப்பிய மெயில் .

அப்பிடி என்னத்த தான் அனுப்பி இருக்கிறார்னு பார்ப்போமா ????????

மை டியர் வைப்

உனக்கு ஆச்சரியமாகவும் புதுமையாகவும் இருக்கும்.இங்கு கம்பியூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இருக்கிறது.


நான் நல்ல படியாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.நான் இங்கு எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணிவிட்டேன் நாளை உனது வருகைக்காக காத்திருக்கிறேன்.


உனது வருகை மிகவும் இனிமையாகவும் சுவராசியமாகவும் இருக்குமென்று நான் நம்புகின்றேன்.

யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று?

கணவன் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?
மனைவி : வீட்டுல வேலைக்காரிய காணோம்,…. அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !

 

மனைவி : என்னங்க… வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !
வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !

 

கணவன் : இன்னும் எழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்….
மனைவி : அப்படீன்னா….. எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?

 

கணவன் : ஐயையோ…..! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க . ! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

 

கணவன் : ஏண்டி… எப்போ பாத்தாலும் கோவமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கொவப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

 

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிபால் குடிச்சு தான் வளந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்ச ?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

 

கணவன் : என் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமா வந்திருக்கு ?
மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா ? தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதா போச்சு…

 

மனைவி : என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..
கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

 

டாக்டர் : உங்க மனைவி உடம்புக்கு என்ன வியாதி ?
கணவன் : அதுதான் தெரியல டாக்டர்..! ரெண்டு நாளா என் அம்மாவ புகழ்ந்து ரொம்ப பெருமையா பேசுறா..எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர்..!

 

மாமியாரும் மாட்டுப் பொண்ணும்

“விமலா மிகவும் சோகத்தில் இருந்தாள்”

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள், அந்த தெரு மக்கள் அனைவரும் விமலாவின் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தார்கள் ..

அன்று காலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. விடியலில் பால் கறக்க சென்ற போது பசு மாடு உதைத்ததில் விமலாவின் மாமியார் இறந்து போயிருந்தார். அந்த பசு விமலா மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தது, அவள் கொஞ்சம கூட எதிர்பார்க்கவில்லை தான் வளர்த்த பசுவால் உதைபட்டு சாவார் என்று . .

திருமணமாகி வந்ததிலிருந்து விமலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்து போனதே இல்லை, எதற்க்கெடுத்தாலும் சண்டை தான், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் அல்ல, எந்த ஒரு விசயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவார்கள், எந்த வேலைகள் செய்தாலும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்வார்கள் ..

ஆனாலும் மாமியாரின் இழப்பு விமலாவை மிகவும் பாதித்திருந்தது, துக்கம் தொண்டையை அடைத்தாலும் அடக்கி கொண்டிருந்தாள் ..

எல்லாம் ஆகி விட்டது .. இன்னும் சிறிது நேரத்தில் அடக்கமாக போகிறார்கள் மாமியார் , அந்த சோக நிமிடங்களில் அவளுக்கு பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர், அனைவருக்கும் பதில் சொல்லி தலையாட்டிக் கொண்டிருந்தாள் விமலா ..

இத்தனை ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார் ..

திருமணமான இள வயது பெண்களிடம் இல்லை என்றும் .. முதிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் சரி என்றும் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .. தூரத்தில் நிற்று கொண்டிருந்த பெரியவரை இது மிகவும் குழப்பியது ..

துக்கம் விசாரிப்பதில் கூடவா வயது வித்தியாசம் இருக்கும் என நினைத்து போய் அவளிடமே கேட்டார் ..

அதற்கு விமலா..

ஆண்களும் வயதான பெண்களும் மனது கலங்காதே .. எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள் ..

இளவயது திருமணமான பெண்கள் அந்தா பசுமாடு விலைக்கு கிடைக்குமா என்று கேட்டார்கள் ..!!!!

“என்ன கொடுமை சார் இது”

சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?

நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது. கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க? 


“இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?” “அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்”

“எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க?” “என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!”

சர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார்? சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு சர்வர்: தோசைக்கல் சார்.

“சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?” “தெரிஞ்சுக்கோங்க….” “பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்!”

ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..

Man1 : C-க்கு கண்டிப்பா கேன்சர் வரும், ஏன்?
Man2 : “BD”பீடி”பக்கத்தில இருந்தா கான்சர் வாராமல் பின்னை என்ன வரும்??

தேளுக்கும் அருவிக்கும் என்ன ஒற்றுமை சொல்லுடா? தெரியாது நீயே சொல்லுடா… ரெண்டுமே கொட்டும்டா.

Doctor : உங்க கிட்னி ஃபெயில் ஆகிடுச்சு….
Patient : நான்தான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே .Doctor… அது எப்படி ஃபெயில் ஆகும்.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்…..
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது !

ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே காசு இல்லை..!’’
‘’அடடா! அப்புறம் என்ன பண்ணினே?’’
‘’பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்’

நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க…


நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?

ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்ஸ்…
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..
ஜட்ஜ்: ????!


விமலாவின் சோகம்

“விமலா மிகவும் சோகத்தில் இருந்தாள்”

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள், அந்த தெரு மக்கள் அனைவரும் விமலாவின் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தார்கள் ..

அன்று காலையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. விடியலில் பால் கறக்க சென்ற போது பசு மாடு உதைத்ததில் விமலாவின் மாமியார் இறந்து போயிருந்தார். அந்த பசு விமலா மிகவும் ஆசையுடன் செல்லமாக வளர்த்தது, அவள் கொஞ்சம கூட எதிர்பார்க்கவில்லை தான் வளர்த்த பசுவால் உதைபட்டு சாவார் என்று . .

திருமணமாகி வந்ததிலிருந்து விமலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்து போனதே இல்லை, எதற்க்கெடுத்தாலும் சண்டை தான், இருவரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் அல்ல, எந்த ஒரு விசயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார்கள், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுவார்கள், எந்த வேலைகள் செய்தாலும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்வார்கள் ..

ஆனாலும் மாமியாரின் இழப்பு விமலாவை மிகவும் பாதித்திருந்தது, துக்கம் தொண்டையை அடைத்தாலும் அடக்கி கொண்டிருந்தாள் ..

எல்லாம் ஆகி விட்டது .. இன்னும் சிறிது நேரத்தில் அடக்கமாக போகிறார்கள் மாமியார் , அந்த சோக நிமிடங்களில் அவளுக்கு பலர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர், அனைவருக்கும் பதில் சொல்லி தலையாட்டிக் கொண்டிருந்தாள் விமலா ..

இத்தனை ஒரு பெரியவர் கவனித்து கொண்டிருந்தார் ..

திருமணமான இள வயது பெண்களிடம் இல்லை என்றும் .. முதிய பெண்கள் மற்றும் ஆண்களிடம் சரி என்றும் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .. தூரத்தில் நிற்று கொண்டிருந்த பெரியவரை இது மிகவும் குழப்பியது ..

துக்கம் விசாரிப்பதில் கூடவா வயது வித்தியாசம் இருக்கும் என நினைத்து போய் அவளிடமே கேட்டார் ..

அதற்கு விமலா..

ஆண்களும் வயதான பெண்களும் மனது கலங்காதே .. எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள் ..

இளவயது திருமணமான பெண்கள் அந்தா பசுமாடு விலைக்கு கிடைக்குமா என்று கேட்டார்கள் ..!!!!

சர்தார் ஜோக்ஸ்

ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்..”” ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ””அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!

சர்தார் அமெரிக்காவில் உள்ள “நாசா” வில் வேலைக்கு சேர்ந்தார்..ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது..”சர்வ நாசா”..!!!

அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, ” நம்பர் ப்ளேட் பாத்துக்கோ” என்றார்..!!

ஒரு முறை நம்ம மொக்ஸ் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு “கக்கா” போயிடுச்சி,நம்ம மொக்ஸுக்கு வந்தது பாருங்க கோவம்,”ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு” கத்துனாரு நடு ரோட்டுல….அதுக்கு அந்த‌ காக்கா கேட்டிச்சாம் “அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜ‌ட்டியில‌ க‌க்கா போவியா”ன்னு….

சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க…

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க…!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்…..” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”நம் சர்தார்ஜி சொன்னார், ” மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”

டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.