சிரிப்பு வருது

சிரிப்போம் சிரிப்போம்… சிரித்து கொண்டே இருப்போம்….

தமிழ் மொழியை விட அழகான மொழி

1 “தமிழ் மொழியை விட அழகான மொழி எது?”
“உங்க பொண்ணு தேன் மொழி சார்!”

2. “உங்க தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும் டபுள்ரேட் சொல்றீக்களே, ஏன்?”
“தண்ணி பாய்ச்சறது கூட வயலுக்கு மினரல் வாட்டர்தான்…!”

3. “அமைச்சரே! நமது நாட்டின் ‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”
“போதையில்தான் மன்னா!”

4. “உன் கடைசி ஆசை என்ன?”
“இந்த வழக்குல உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிச்சு எனக்குக் காண்பிங்க எசமான்!”

5. “என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்…?”
“சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி ‘மன்னா’ என்று அழைக்காமல் ‘அண்ணா’ என்று அழைத்துவிட்டாளாம்…!”

6. “மன்னா, ஆபத்து… ஆபத்து வந்துவிட்டது…!”
“என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா?”
“இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்…!”

7. “என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்…?”
“மன்னா, ‘பட்டத்து யானையை அலங்கரியுங்கள்’ என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…!”

8. “தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…”
“இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!”

9. “மன்னா! அரசாங்க ரகசியத்தை இந்த ஒற்றன் அறிந்து கொண்டான்…”
“நான் சமையலறையில் மகாராணிக்கு உதவியாக காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன் பார்த்துவிட்டானா…?”

10. “மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது… என்ன பதில் அனுப்புவது…?”
“நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா…?”

11. “மன்னா, உங்களைப் பாட புலவர் வந்திருக்கிறார்…!”
“இப்போதுதான் மகாராணியிடம் பாட்டு வாங்கி வந்தேன்!”

12. “டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?”
“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…”

13. “தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”
“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”

14. “மன்னா! புலவர் எழுதிய பாட்டில் உங்களைப் புகழ்ந்து தானே இருக்கிறது. ஏன் கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே! ஓலையின் கீழே பாருங்கள். ‘மேலே கூறியவை முழுக்க, முழுக்க கற்பனையே! யாரையும், எவரையும் குறிப்பிடுபவை அல்ல’னு எழுதியிருக்கே!”

15. “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே…?”
“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே…!”

16. “நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!”
“இப்படி கூட செய்வாங்களா?”
“இங்க பாருங்க… ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”

நன்றி http://adrasaka.blogspot.com/2010/11/blog-post_8379.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: